தமிழ்நாடு

முக ஸ்டாலின் உத்தரவு: உடைத்தெறியப்பட்ட ‘அம்மா உணவகம்’ போர்டு மீண்டும் மாட்டப்பட்டது

Published

on

அதிமுக ஆட்சி முடிந்து திமுக ஆட்சி தொடங்க இருக்கும் நிலையில் இன்று காலை சென்னையில் உள்ள அம்மா உணவகம் ஒன்றின் போர்டு அடித்து நொறுக்கப்பட்டது குறித்த வீடியோ வைரல் ஆனது. இதனை அடுத்து ஆட்சிக்கு வரும் முன்பே அராஜகமா? என நெட்டிசன்கள் பலர் டுவிட்டரில் இந்த வீடியோவுக்கு கமெண்ட்ஸ்களை பதிவு செய்தனர்.

இந்த நிலையில் இது குறித்து திமுக தலைவரும் தமிழக முதல்வராக பொறுப்பேற்க இருப்பவருமான முக ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு சென்றது. இதனையடுத்து அவர் உடனடியாக அம்மா உணவகத்தின் போர்டை அடித்து நொறுக்கியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதுமட்டுமின்றி அந்த போர்டை மீண்டும் மாட்டவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முன்னாள் மேயரும் சைதாப்பேட்டை தொகுதி எம்எல்ஏவுமான மா சுப்பிரமணியம் அவர்கள் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: மதுரவாயல் பகுதியில் அரசு உணவகத்தின் பெயர் பலகையை எடுத்த இரண்டு கழக தோழர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும், பெயர் பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்கவும்,அவ்விருவரை கழகத்திலிருந்து நீக்கவும் வணக்கத்திற்குரிய கழகத்தலைவர் அவர்கள் உடனடியாக உத்தரவிட்டார்…

Trending

Exit mobile version