இந்தியா

ஒருசில நிமிட இடைவெளியில் மோடி, சோனியாவை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்!

Published

on

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று இரவு டெல்லி சென்று இருக்கும் நிலையில் இன்று ஒரு சில நிமிட இடைவேளையில் எதிர்க்கட்சி தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரதமர் மோடி ஆகிய இருவரையும் நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

முதலில் நாடாளுமன்ற டெல்லி திமுக அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சோனியா காந்தி முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். அவர் வணக்கம் சொல்ல வந்தேன் என்றும் சனிக்கிழமை நடைபெற உள்ள டெல்லி திமுக அலுவலக திறப்பு விழாவில் சந்திக்கிறேன் என்று கூறியுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் திடீ ரென சென்று முதல்வர் ஸ்டாலினிஅ சோனியாகாந்தி சந்தித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை அடுத்து ஒரு சில நிமிட இடைவெளியில் பிரதமர் மோடியை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா கலைஞர் அறிவாலயம் திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை அவர் வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது .

மேலும் காவிரியில் மேகதாது அணையை கட்ட கர்நாடகாவை அனுமதிக்க கூடாது என்றும் ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கு வர வேண்டிய நிதி போன்றவை குறித்த கோரிக்கையையும் அவர் பிரதமருடன் விடுத்தார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

 

Trending

Exit mobile version