தமிழ்நாடு

கை கொடுத்த தொண்டர் – தட்டிவிட்டு முரைத்த மு.க.ஸ்டாலின் – வைரல் வீடியோ!

Published

on

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர் வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இப்படி அவர் ஒரு பொதுக் கூட்டத்துக்குப் போகும் முன்னர், தன் வேனில் அமர்ந்தபடி தொண்டர்கள் கொடுக்கும் அன்பளிப்புகளை வாங்கியுள்ளார். அப்படி வாங்கும் போது ஒரு தொண்டர் ஸ்டாலின் கையைப் பிடித்துள்ளார். இதனால் கோபம் கொண்ட ஸ்டாலின், அந்தத் தொண்டரின் கையை தட்டிவிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்தான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் 100 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின்.

இது குறித்து அவர் இன்று சென்னை, கோபாலபுரத்திற்கு வந்து செய்தியாளர்களை சந்தித்து விளக்கினார். அதன்படி, திமுக ஆட்சி அமைந்த முதல் 100 நாட்களில் பொது மக்களின் அனைத்துப் பிரச்னைகளும் போர்க்கால அடிப்படையில் தீர்க்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், http://stalinani.com என்ற இணையதளம் அல்லது 91710 91710 என்ற எண்ணில் தொடர்புகொண்டு கோரிக்கைகளை பதிவிட்டால், ஆட்சிக்கு வந்தவுடன் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார்.

இந்த ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ பிரச்சாரப் பயணத்தின் போது தான் இச்சம்பவம் நடந்துள்ளதாக தெரிகிறது.

seithichurul

Trending

Exit mobile version