தமிழ்நாடு

ஸ்டாலினால் பஞ்சாயத்துத் தலைவராகத்தான் முடியும், முதல்வராக முடியாது: தம்பிதுரை விளாசல்!

Published

on

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியலில் நல்ல அனுபவம் உள்ளவர். கலைஞர் கருணாநிதியின் மகனான ஸ்டாலின் இதுவரை முதல்வராக முடியவில்லை. சென்றமுறை வென்றிருந்தால் ஸ்டாலின் முதல்வர் ஆக வாய்ப்பிருந்தது. ஆனால் ஜெயலலிதா தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்து சாதனை படைத்தார். இதனால் ஸ்டாலினால் முதல்வராக முடியவில்லை.

இதனையடுத்து அரசியலில் பலமுறை ஸ்டாலினை முதல்வர் ஆக முடியாது என பலர் விமர்சித்துள்ளனர். இந்நிலையில் அடுத்த வர உள்ள தமிழக சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சியை பிடிக்க ஸ்டாலின் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளார். ஊராட்சி சபை கூட்டத்தை தமிழகம் முழுவதும் தீவிரமாக நடத்தி வருகிறது திமுக. இதில் கலந்துகொண்டு பேசிய ஸ்டாலின் அதிமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதிமுக எம்பியும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை வேடசந்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார். அதில், ஊராட்சி சபைக் கூட்டம் என்ற பெயரில் பஞ்சாயத்துத் தலைவர் போல ஸ்டாலின் செயல்படுகிறார். ஸ்டாலினால் பஞ்சாயத்துத் தலைவராகத்தான் முடியும், முதல்வராக முடியாது என்றார் தம்பிதுரை.

seithichurul

Trending

Exit mobile version