செய்திகள்

வெள்ளத்தில் சிக்கிய தாயும் சேயும் காப்பற்றப்பட்ட வீடியோ… பாராட்டிய முதல்வர்..

Published

on

தமிழகத்தில் தற்போது மழை பெய்து வருவதால் நீர் நிலைகள் நீரால் நிரம்பி வருகிறது. ஏரிகளிலும், அருவிகளிலும் நீர் கொட்டி வருகிறது.

சேலம் மாவட்டம் ஆத்தூருக்கு அருகே உள்ள பகுதி முட்டல். இப்பகுதியில் உள்ள ஆனைவாரி நீர்வீழ்ச்சியில் நீர் கொட்டி வருகிறது. எனவே, ஆத்தூரை சுற்றியுள்ள மக்கள் அந்த நீர்வீழ்ச்சிக்கு சென்று குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

அப்படி சிலர் குளித்துக்கொண்டிருந்த போது திடீரென நீர் வரத்து அதிகமாகி வெள்ளம் போல் மாறியது. இதில் ஒரு பெண்ணும், அவரின் குழந்தையும் நீரில் மாட்டிக்கொண்டனர். ஆனால், துரிதமாக செயல்பட்ட சில வாலிபர்கள் மரத்தில் கயிறு கட்டி அவர்கள் இருவரையும் மேலே ஏற்றி காப்பாற்றினர்.

அதோடு, மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த இரு வாலிபர்கள் வெளியேறும் போது பிடிமானம் இல்லாமல் நீர்வீழ்ச்சியில் விழுந்தனர். காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அந்த வாலிபர்கள் நீந்தி கரை சேர்ந்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், தாயையும், குழந்தையையும் காப்பாற்றிய வாலிபர்களை முதல்வர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார். அந்த வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்து ‘தாயையும் சேயையும் காப்பாற்றியவர்களின் தீரமிக்க செயல் பாராட்டுக்குரியது; அரசால் சிறப்பிக்கப்படுவார்கள். தன்னுயிர் பாராது பிறரது உயிர் காக்க துணிந்த அவர்களது தீரத்தில் மனிதநேயமே ஒளிர்கிறது!

பேரிடர்களின்போது பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்!’ என பதிவிட்டுள்ளார்.

 

 

seithichurul

Trending

Exit mobile version