தமிழ்நாடு
இராணுவ வீரர்கள் தேர்வு போல் திமுக வேட்பாளர்க தேர்வு இருக்க வேண்டும்: ஸ்டாலின்
ராணுவ வீரர்கள் தேர்வு போல் திமுக வேட்பாளர்கள் தேர்வு இருக்க வேண்டுமென மாவட்ட செயலாளர்களுக்கு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் அவர்கள் அறிவுரை கூறியுள்ளார்.
குற்றப் பின்னணி உள்ளவர்களை திமுக சார்பில் வேட்பாளர்களாக நிறுத்த வேண்டாம் என்றும் அவர் திமுக மாவட்ட செயலாளர்கள் கண்டிப்புடன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நாடே போற்றும் வகையில் வெல்வோம் என்றும் நல்லாட்சியை மேலும் மேலும் முன்னெடுத்துச் செல்வோம் என்றும் நல்லாட்சியின் விளைச்சலை உள்ளாட்சியில் முழுமையாக அறுவடை செய்திட ஊக்கத்துடன் அயராது பாடுபடுவோம் என்றும் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் மதவெறியை விதைக்கும் பாஜகவின் சீரழிவு அரசியலை மக்களிடம் எடுத்து செல்லுங்கள் என்றும் அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டு பட்ட பாட்டை மக்களுக்கு நினைவுபடுத்துங்கள் என்றும் நகர்ப்புற உள்ளாட்சியில் வெல்வோம் என்ற தலைப்பில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் தனது தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.