தமிழ்நாடு

தவறான வழிகாட்டுதலால் படிப்பை இழந்த மாணவிக்கு எஸ்.ஆர்.எம் பல்கலை செய்த உதவி!

Published

on

கல்லூரி நிர்வாகத்தின் தவறான தகவலால் படிப்பை இழந்து வீதிக்கு வந்த மாணவி ஒருவருக்கு எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் அனைத்தும் இலவசமாக தந்து படிப்பதற்காக வழிவகை செய்துள்ளது.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சத்யா தேவி என்ற மாணவி 12-ம் வகுப்பு முடித்துவிட்டு அக்ரி பட்டப்படிப்பு படிக்க விரும்பினார். ஆனால் கல்லூரி நிர்வாகம் அவருக்கு மைக்ரோபயாலஜி பாடப்பிரிவு தான் ஒதுக்கியது. அதற்காக கட்டணம் ரூபாய் 22,000 அக்கல்லூரி நிர்வாகம் பெற்று கொண்டது.

இந்த நிலையில் திடீரென தேர்வு எழுதும் நேரத்தில் வேதியல் படிக்காத மாணவி மைக்ரோபயாலஜி படிக்க முடியாது என்று கூறி மாணவியை டிஸ்மிஸ் செய்தது. இதனால் அந்த மாணவி ஒரு வருடத்திற்கான கட்டணம் கொடுத்தும், படிப்பை தொடர முடியாமல் கல்லூரியை விட்டு வெளியே வர நேர்ந்தது.

இதன் பின் கல்லூரி கட்டணத்திற்காக வாங்கிய கடனுக்காக தனது தாயாருடன் சாலை போடும் வேலையை அவர் பார்த்து வந்தார். இந்த நிலையில் இது குறித்த செய்தி சமூக வலைதளங்களிலும் இணையதளங்களிலும் வெளிவந்தது. இதனை அடுத்து பலரும் அந்த மாணவிக்கு உதவி செய்ய முன்வந்தனர்.

இதுகுறித்து கேள்விப்பட்ட எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் பாரிவேந்தர் அந்த மாணவிக்கு உதவி செய்ய முன்வந்துள்ளார். அந்த மாணவியை தனது கல்லூரியில் அவர் விரும்பிய விவசாய படிப்பு படிக்க சேர்த்துக் கொள்வதாகவும், மூன்றாண்டுகளுக்கு எந்த விதமான கல்வி கட்டணம், தங்கும் விடுதி, உணவு கட்டணம் உள்பட எந்தக் கட்டணமும் கட்ட வேண்டிய அவசியம் இல்லை என்றும் தானே அனைத்தையும் ஏற்பதாகக் கூறினார். இதனைக் கேட்டு அந்த மாணவி மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

தற்போது அந்த மாணவி தனது அக்ரி படிப்பின் கனவு நனவாகியது குறித்து மிக்க மகிழ்ச்சி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version