தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூரில் மறுதேர்தலா? தேர்தல் ஆணையம் விளக்கம்

Published

on

ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாதவராவ் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற செய்தி அனைவரையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் தேர்தல் முடிவடைந்த நிலையில் அந்த தொகுதியின் வேட்பாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதால் அந்த தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்படுமா அல்லது மறு தேர்தல் நடத்தப்படுமா என்பது குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.

இதுகுறித்து சற்றுமுன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மறைவால் அந்த தொகுதியில் வாக்கு எண்ணிக்கை பாதிக்கப்படாது என்று கூறிய அவர் வாக்கு எண்ணிக்கையின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் அவர்கல் வெற்றி பெற்றால் மறுதேர்தல் நடத்தப்படும் என்று கூறியுள்ளார்

எனவே ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றால் மறு தேர்தல் உறுதி என்பதும் ஆனால் அதே நேரத்தில் வேறு வேட்பாளர் வெற்றி பெற்றால் மறுதேர்தல் இல்லை என்பது உறுதியாகி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version