சினிமா செய்திகள்
ரஜினி படத்தில் முதன்முறையாக இணைந்த காஞ்சனா பட நடிகர்!
![Rajinikanth & Sriman - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/06/D8Yt_fPUwAEvRQW.jpg)
தமிழ் சினிமாவில் 20 வருடங்களுக்கு மேலாக நடித்து வருபவர் நடிகர் ஸ்ரீமன். ஆனால், அவருக்கு தற்போது தான் முதன்முறையாக சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தில் நடிகர் ஸ்ரீமன் இணைந்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஸ்ரீமன், 19 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் படத்தில் நடிக்கிறேன். மேலும், முதன்முறையாக எனது சினிமா வாழ்க்கையில் தலைவர் சூப்பர்ஸ்டாருடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளேன். சந்தோஷ் சிவனின் லென்ஸ்கள் என்னையும் படம் பிடிக்க போகின்றன என பட தயாரிப்பு நிறுவனமான லைகாவிற்கு நன்றி கூறியுள்ளார்.
மேலும், ரஜினிகாந்த், ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் விக்னேஷ் சிவனுடன் ஸ்ரீமன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.