தமிழ்நாடு

வரலாறு காணாத விலைவாசி: தமிழகத்திற்கு அகதிகளாய் வரும் இலங்கை மக்கள்!

Published

on

இலங்கையில் வரலாறு காணாத விலை உயர்வை அடுத்து இலங்கை மக்கள் தமிழகத்துக்கு அகதிகளாக வந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன

இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணைத் தொட்டுள்ளது என்பதும் அங்கு ஒரு பவுன் தங்கம் விலை ஒன்றரை லட்ச ரூபாய் விற்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

பேப்பர் வாங்க முடியாத காரணத்தினால் இலங்கையில் மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்படும் நிலையில் தான் இலங்கையில் தற்போது உள்ளது. சீனாவிடம் கோடிக்கணக்கான ரூபாய் கடன் வாங்கியதற்காக வட்டிகட்டியே இலங்கையின் பொருளாதாரம் சீரழிந்து விட்டதாக கூறப்படுகிறது. ராஜபக்ச குடும்பத்தினரின் தவறான பொருளாதாரக் கொள்கை தான் இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இலங்கையில் அத்தியாவசியமான பொருட்களின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளதால் இலங்கை மக்கள் தமிழகத்துக்கு அகதிகளாக வந்து கொண்டிருப்பதாகவும் மூன்று குழந்தைகள் மொத்தம் ஆறு பேர்களை ரோந்து படையினர் கண்டுபிடித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது

இன்னும் பலர் அகதிகளாக வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் ரோந்து படையினர் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்

author avatar
seithichurul

Trending

Exit mobile version