உலகம்

பணம் அச்சடித்துதான் அரசு ஊழியர்களுக்கு சம்பளமே போட முடியும்: இலங்கை பிரதமர்

Published

on

புதிதாக பணம் அச்சு அடித்தால் மட்டும் தான் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போட முடியும் என்ற நிலை இருப்பதாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.

இலங்கை பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ததை அடுத்து புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்ட ரணில் விக்ரமசிங்கே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் அரசுக்கு வருமானம் சுத்தமாக இல்லை . மேலும் அந்நிய செல்வாணி வர்த்தகம் இல்லாததால் ஆங்கிலேயர் ஆட்சியில் கூட இல்லாத நெருக்கடியை இலங்கை அரசு எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளதாக கூறினார்

கடந்த காலங்களில் இதுபோன்ற நெருக்கடிகளை சமாளித்து வந்ததை நினைவு கூர்ந்த அவர் தற்போது இருக்கும் இந்த சவாலையும் நாங்கள் எதிர் கொள்வோம் என்றும் மக்களுக்கு சிறந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுப்போம் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் புதிதாக பணம் அச்சடிப்பது தனது கொள்கை இல்லை என்றாலும் அப்படிச் செய்யாவிட்டால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத சூழ்நிலை உருவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை பிரதமரின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

 

Trending

Exit mobile version