உலகம்

எமர்ஜென்ஸியை அடுத்து இன்னொரு அதிர்ச்சி கொடுத்த இலங்கை அரசு: உச்சகட்ட கோபத்தில் பொதுமக்கள்!

Published

on

இலங்கையில் சமீபத்தில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு அதிர்ச்சியை இலங்கை அரசு பொது மக்களுக்கு கொடுத்து உள்ளதால் பொதுமக்கள் உச்சகட்ட கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது .

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவின் தவறான பொருளாதாரக் கொள்கை முடிவு காரணமாக இலங்கையில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்தியா அவ்வப்போது உதவி செய்து வந்தாலும் இலங்கையின் பொருளாதார நெருக்கடியை மீட்க இப்போதைக்கு வழியே இல்லை என்று பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் கோத்தபய ராஜபக்சே மீது கடும் கோபத்தில் இருக்கும் பொதுமக்கள் அவரது மாளிகை முன்பு திடீரென போராட்டம் நடத்தியதால் இலங்கையில் பதட்டம் ஏற்பட்டது. இதனை அடுத்து இலங்கை அரசு அதிரடியாக நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்தியது .

இதனால் கடும் அதிருப்தியில் இருக்கும் பொதுமக்களுக்கு தற்போது இன்னொரு அதிர்ச்சியை இலங்கை அரசு கொடுத்துள்ளது. அதாவது இலங்கையில் பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களை தடை செய்யப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் இடையே தொடர்பு துண்டிக்கப்படும் என்பதால் பொதுமக்கள் உச்சக்கட்ட கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

 

 

seithichurul

Trending

Exit mobile version