சினிமா செய்திகள்

கீர்த்தி சுரேஷை சீண்டிய ஸ்ரீரெட்டி!

Published

on

கீர்த்தி சுரேஷ் ஒரு நல்ல நடிகை இல்லை என்றும் அவரை விட தனக்குத் தான் செல்வாக்கு அதிகம் என்ற தொனியில் பேஸ்புக் பக்கத்தில் நடிகை ஸ்ரீரெட்டி இட்டுள்ள பதிவு கீர்த்தி சுரேஷ் ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

டோலிவுட், கோலிவுட் என சினிமாவில் இருக்கும் பெரும் புள்ளிகள் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக அரைநிர்வாண போராட்டம் நடத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி.

இந்நிலையில், விமானத்தில் செல்லும் போது, உடல் எடை குறைந்த நிலையில், நோயாளி போல தோற்றமளிக்கும் கீர்த்தி சுரேஷை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. அவருடன் பயணித்த என்னை பலரும் அடையாளம் கண்டு செல்ஃபி எடுத்துக் கொண்டனர் என தனது பேஸ்புக் பக்கத்தில் ஸ்ரீரெட்டி பதிவிட்டுள்ளார்.

இதற்கு, அவர் நல்ல நடிகை என்றும், உங்களைப் போல போலி விளம்பரத்திற்காக அலைபவர் அல்ல என்றும் கீர்த்தி சுரேஷின் ரசிகர்கள் பலரும் ஸ்ரீரெட்டிக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version