சினிமா செய்திகள்

சந்தானத்தை கவர இப்படியொரு வீடியோவை வெளியிட்ட ஸ்ரீரெட்டி!

Published

on

சந்தானம் நடிப்பில் இந்த வாரம் ரிலீசாகவுள்ள ஏ1 படத்தில், அக்ரஹாரத்து பெண் ஆம்லெட் சாப்பிடுவது போன்ற ஒரு காட்சி உள்ளது. டீசரில் வெளியான இந்த காட்சிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், ஸ்ரீரெட்டி அந்த காட்சியை டிக்டாக் செய்து வெளியிட்டுள்ளார்.

தெலுங்கு, தமிழ் திரையுலகினர் மீது அடுக்கடுக்காக பாலியல் புகார் கொடுத்து வந்த நடிகை ஸ்ரீரெட்டி, தற்போது ஒரு டிக் டாக் வீடியோ வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.

சந்தானம், தாரா அலிசா நடித்துள்ள ஏ1 (அக்யூஸ்ட் நம்பர் 1) படம் இந்த வாரம் வெளிவர இருக்கிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான தில்லுக்கு துட்டு 2 சந்தானத்திற்கு நல்ல வசூலை தந்த உற்சாகத்தில் ஏ1 படம் மீதும் மிகப்பெரிய நம்பிக்கையை வைத்துள்ளார்.

மேலும், இந்த படத்திற்கு சந்தோஷ் நாரயாணன் இசையமைத்துள்ளார். பாடல்கள் எல்லாம் அற்புதமாக வந்துள்ளது.

இந்த படத்தின் டீசரில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரிய காட்சியை நடிகை ஸ்ரீரெட்டி டிக் டாக் வீடியோவாக வெளியிட்டு சந்தானத்தை கவர முயற்சி செய்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version