இந்தியா

8 மாநிலங்களை இணைத்து நேபாளத்திற்கு ரயில்: இந்தியன் ரயில்வே புதிய சேவை

Published

on

ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு ரயிலில் செல்வது என்பது ஐரோப்பிய நாடுகளில் சர்வசாதாரணமாக இருந்து வருகிறது. ஆனால் இந்தியாவை பொருத்தவரை அண்டை நாடுகளுக்கு எந்தவித ரயில் சேவையும் இல்லாத நிலையில் தற்போது நேபாளத்திற்கு ரயில் சேவையை புதிதாக தொடங்கப்பட உள்ளதாக இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்தியா மற்றும் நேபாளத்தில் நாடுகளை இணைக்கும் வகையில் ஸ்ரீ ராமாயண யாத்திரை என்ற ரயிலை இந்திய ரயில்வே அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ரயில் ஐஆர்சிடிசி மூலம் இயக்கப்படும் என்றும் இந்த ரயில் 8 மாநிலங்கள் கடந்து நேபாளத்துக்கு செல்ல உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது .

உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகம், தமிழ்நாடு, ஆந்திரா, பீகார் மற்றும் ஒரிசா ஆகிய எட்டு மாநிலங்களில் இந்த ரயில் பயணம் செய்யும் என்றும், ரயில் முழுவதுமே ஏசி கோச் ஆக இருக்கும் என்றும் வேறு வகையான பெட்டிகள் இருக்காது என்றும் கூறப்படுகிறது.

இந்த ரயிலின் முதல் பயணம் ஜூன் 21 ஆம் தேதி டெல்லியில் உள்ள சப்தர்ஜங் ரயில் நிலையத்தில் இருந்து தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 18 நாட்கள் சுற்றுலா செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ரயிலில் 600 பேர்கள் வரை பயணம் செய்யலாம்.

 

seithichurul

Trending

Exit mobile version