உலகம்

தோல்வி முகத்தோடு வெளியேறிய ராஜபக்‌ஷே: இலங்கையில் உச்சக்கட்ட பரபரப்பு!

Published

on

நமது அண்டை நாடான இலங்கையில் உச்சக்கட்ட அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழலே நிலவுகிறது. இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமர் ராஜபக்‌ஷேவும் அவரது அமைச்சரவையும் இன்று நடைபெற்ற நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தோல்வி அடைந்தது.

இதனால் இலங்கை நாடாளுமன்றத்தில் இருந்து ராஜபக்‌ஷே தோல்வி முகத்தோடு வெளியேறினார். இந்நிலையில் இலங்கையின் அடுத்த பிரதமர் யார் என்ற குழப்பம் நிலவி வருகிறது. மீண்டும் பிரதமராக ரனில் விக்ரமசிங்கே வருவாரா அல்லது ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இலங்கையின் சட்டம் ஒழுங்கு செல்லுமா என்ற பரபரப்பு நிலவி வருகிறது.

ரனில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக வரக்கூடாது என்ற முடிவில் அதிபர் சிறிசேனா இருப்பதால் அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஐக்கிய தேசியக் கட்சியில் இருக்கும் சிலர் பேச்சுவார்த்தையில் இறங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் அதிபர் சிறிசேனா நேற்று இரவு முப்படைத் தளபதிகளோடு நீண்ட நேரம் ஆலோசனை நடத்தி இலங்கையின் சட்டம் ஒழுங்கு முழுப் பொறுப்பையும் ராணுவம் எடுத்துக்கொள்ளுமாறு, நாட்டின் பதற்றமான இடங்களில் ராணுவத்தைக் குவிக்குமாறும் அதிபர் சிறிசேனா அறிவுறுத்தியதாகச் செய்திகள் வெளிவந்தன.

இதனால் இலங்கையில் மீண்டும் ரனில் ஆட்சியமைப்பாரா அல்லது ராணுவத்தின் கை ஓங்குமா என்பதை இலங்கை மட்டுமல்லாமல் பல நாடுகளும் எதிர்நோக்கியுள்ளன.

Trending

Exit mobile version