உலகம்

தமிழகத்திலிருந்து 50 கி.மீ-ல் இலங்கையில் அமையும் சீன மின்சாரத் திட்டம் – இந்தியாவுக்கு அச்சுறுத்தல்!!!

Published

on

இலங்கையின் யாழ்ப்பாணத்தில், சீனத் தரப்பின் மின்சாரத் திட்டத்துக்கு ஒப்புதல் கொடுத்துள்ளது அந்நாட்டு அரசு. இது தமிழகத்திலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் அமையும் மின்சாரத் திட்டம் ஆகும். இதனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. இது இலங்கை – சீனா நாடுகளுக்கு இடையே உறவு வலுவாக இருப்பதை மட்டும் காண்பிக்கவில்லை. இந்தியா – இலங்கை இடையே நாளுக்கு நாள் உறவு வலுவிழந்து வருவதையும் காண்பிப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து கூறியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தின் பாக் ஜலசந்தியில் அமைந்துள்ள மூன்று தீவுகளில் இந்த ஒருங்கிணைந்த மின்சாரத் திட்டம் அமைய உள்ளதாம். இந்நிலையில் இது குறித்து இந்திய அரசுத் தரப்பு எந்த வித கருத்தையும் இதுவரை சொல்லவில்லை. அதே நேரத்தில் இலங்கை அரசின், இந்த நடவடிக்கைக்கு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டு உள்ளதாக தகவல்.

சில நாட்களுக்கு முன்னர் தான், இலங்கைக்கு அருகே தமிழகத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களை அந்நாட்டுக் கடற்படையினர் சுட்டுக் கொன்றனர். தொடர்ச்சியாக தமிழக மீனவர்களை தாக்கியும், அவர்களின் படகுகளை சேதப்படுத்தியும், வலைகளை அறுத்தும், கைது செய்தும் அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகிறது இலங்கை கடற்படை. இந்நிலையில் இலங்கை அரசு, சீனாவுக்குச் சாதகமாக நடந்து கொண்ட இவ்விவகாரமும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Trending

Exit mobile version