கிரிக்கெட்

ஐதராபாத் அணி ஒத்துவராது: ராஜினாமா செய்து மூட்டையை கட்டிய பயிற்சியாளர்!

Published

on

ஐதராபாத் அணியின் பயிற்சியாளர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் ஐபிஎல் ஏலம் நடைபெற்றபோது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் எந்த வீரர்களை ஏலம் எடுக்க வேண்டும், எத்தனை கோடிக்கு எடுக்க வேண்டும் என்று பயிற்சியாளர்கள் திட்டமிட்டிருந்தனர். அந்த திட்டத்தின்படி ஏலம் எடுக்க முயற்சித்தபோது கலாநிதி மாறனின் மகள் காவியா மாறன் அந்த திட்டத்தை செயல்படுத்தாமல் அவருடைய விருப்பத்திற்கு இணங்க வீரர்களை ஏலம் எடுத்ததாக கூறப்படுகிறது .

இதனால் அதிர்ச்சி அடைந்த பயிற்சியாளர் சைமன் கேடிச் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஏற்கனவே ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் ஹைதராபாத்தில் இல்லாத நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவை சேர்ந்த பயிற்சியாளரும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஒரு அணியை எப்படி திட்டமிடவேண்டும்? எந்தெந்த வீரர்களை களம் இருக்கவேண்டும்? அணிக்கு எந்தெந்த வீரர்களை தேர்வு செய்ய வேண்டும்? என்பது ஒரு பயிற்சியாளருக்கு தான் தெரியும் என்றும் ஒரு வீரரை தேர்வு செய்யுமுன் பயிற்சியாளர்களிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்றும் ஆனால் ஹைதராபாத் அணி நிர்வாகிகள் இதுகுறித்து எங்களை மதிக்காததால் ராஜினாமா செய்ததாகவும் சைமன் கேடிச் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Trending

Exit mobile version