சினிமா செய்திகள்

ஒரே நேரத்தில் 30 திரைப்படமா? எஸ்.ஆர்.பிரபு பதில்

Published

on

ஒரே நேரத்தில் ஓடிடி பிளாட்பாரத்திற்காக 30 திரைப்படங்களை தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு தயாரிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்த நிலையில் இந்த செய்திக்கு எஸ்ஆர் பிரபு தனது தரப்பிலிருந்து விளக்கமளித்துள்ளார்.

தங்களை தாங்களே பத்திரிக்கையாளர்கள் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் ஒரு சிலர் யூடியூப் வீடியோக்களில் தங்கள் இஷ்டத்திற்கு கற்பனை குதிரைகளை பறக்கவிட்டு சினிமா செய்திகளை கூறி வருவது வழக்கமாகி வருகிறது.

அந்த வகையில் யூடியூப் சேனல் ஒன்றில் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு அவர்கள் ஒரே நேரத்தில் 30 திரைப்படங்கள் தயாரிக்க இருப்பதாகவும், அந்த 30 திரைப்படங்களும் ஓடிடி பிளாட்பாரத்திற்காக தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் அதில் ஏழு திரைப்படங்கள் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் என்றும் அதில் இரண்டு திரைப்படங்கள் நயன்தாரா நடித்தது என்றும் கூறினர்.

இது குறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலாக வந்த நிலையில் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு விளக்கம் அளித்துள்ளார். லாக்டவுன் நேரத்தில் ஒரு சில திரைக்கதைகளை நாங்கள் தேர்வு செய்து வைத்து இருப்பது உண்மைதான். ஆனால் 30 என்பது ஒரு தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்புக்கு சாத்தியம் அல்ல. இருப்பினும் சில வருடங்கள் கழித்து அது உண்மையாகும் என்று நான் நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதிலிருந்து எஸ்ஆர் பிரபு ஒரே நேரத்தில் 30 திரைப்படங்கள் தயாரிக்கும் திட்டம் இல்லை என்பது உறுதியாகி உள்ளது. ஃபாலோயர்கள் அதிகமாகிவிட்டால் தங்கள் இஷ்டத்திற்கு சினிமா செய்திகளை அள்ளிவிட்டு ரசிகர்களை முட்டாளாக்குவதை நிறுத்த வேண்டும் என்று சினிமா ரசிகர்கள் கேட்டுக்கொண்டு வருகின்றனர்.

Trending

Exit mobile version