தொழில்நுட்பம்

இந்திய “ராணுவ ஏவுகணை” ரகசியங்களை பேஸ்புக் “லீக்” செய்த “ஸ்பை” கைது.!

Published

on

புது டெல்லி: மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் தனியார் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரியும் பொறியாளர் நேற்று கைது செய்யப்பட்டார்.

நிஷாந்த் அகர்வால் ஏவுகணை மையத்தின் தொழில்நுட்ப ஆராய்ச்சி பிரிவில் கடந்த நான்கு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார், குருக்ஷேத்ராவில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியாளராகப் படித்து, தங்கப் பதக்கம் பெற்ற பிரகாசமான மாணவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவரது பேஸ்புக் அக்கௌன்ட் இல் பாகிஸ்தான் நாட்டு மர்ம நபர்களுடன்  ராணுவ ஏவுகணை ரகசியங்களை பகிர்ந்துள்ளார் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நிஷாந்த் அகர்வால், ராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் பேஸ்புக் ஐடி-களில் பகிர்ந்ததற்குக் கரணம் “ஹனி ட்ராப்பிங்”காக இருக்குமோ என்றும் போலீசார் சந்தேகிக்கிறது.

ஹனி ட்ராப்பிங் என்பது பாலியல் உறவு அல்லது பணத்திற்காக அரசியல் மற்றும் ரகசிய தகல்வல்களை தனி மனித ஆதாயத்திற்காகப் பயன்படுத்திக்கொள்ளும் புலனாய்வு முறை என்பது பொருள் ஆகும்.

பிரமோஸ் ஏவுகணை தகவல் மற்றும் இராணுவ ரகசிய தகவல்களை பேஸ்புக் இல் லீக் செய்த குற்றத்திற்காக அவர் அதிகாரப்பூர்வ ரகசிய சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு, அவரது வீட்டு மற்றும் அலுவலகக் கணினிகள் கைப்பற்றப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

 

 

 

seithichurul

Trending

Exit mobile version