இந்தியா

இந்தியாவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு அனுமதி: மத்திய அரசு ஒப்புதல்

Published

on

இந்தியாவில் ஏற்கனவே இரண்டு வித கொரனோ தடுப்பூசி வழக்கத்தில் இருக்கும் நிலையில் தற்போது மூன்றாவதாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியை பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரனோ வைரஸ் பாதிப்பு பரவி வரும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இரண்டு வித தடுப்பூசிகளை பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

இந்த தடுப்பூசிகள் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து பொதுமக்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மார்ச் மாதம் முதல் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தியாவில் நாளுக்கு நாள் கொரனோ வைரஸ் பாதிப்பு அதிகமாகி வருவதை அடுத்து மூன்றாவதாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பு ஊசியையும் தேவைக்கு ஏற்ப பயன்படுத்த வேண்டும் என்றும் அதற்கு இந்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். இதனை அடுத்து மூன்றாவது தடுப்பூசியாக ஸ்புட்னிக் தடுப்பூசியை கால தேவைக்கு ஏற்ப இந்தியாவில் பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

Trending

Exit mobile version