உலகம்

எச்-1 பி விசா வைத்திருக்கும் இந்தியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. பைடன் நிர்வாகத்தின் புதிய அறிவிப்பு!

Published

on

பைடன் அரசாங்கத்தின் புதிய குடிவரவு மசோதாவின் விதிகளின்படி, எச் -1 பி விசா வகை போன்ற குடியேறாத தொழிலாளர்களின் துணைவர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இருக்கும் சிறப்பம்சம் என்னவென்றால் வேலைவாய்ப்பு அங்கீகாரத் திட்டம் தொடர்பான தற்போதைய கட்டுப்பாட்டு நிபந்தனைகள் எதுவும் இதற்கு பொருந்தாது.

அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2019 நிதியாண்டில் மட்டும் கால அவகாசம் நீட்டிப்பு உட்பட 3.89 லட்சம் எச் -1 பி விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் கிட்டத்தட்ட 72% அல்லது 2.78 லட்சம் இந்திய பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் எச் -1 பி விசா வைத்திருப்பவர்களுக்கு க்ரீன் கார்டு வழங்குவதற்கான ஏற்பாடுகளும் அல்லது அதற்குரிய கால அளவான 6 ஆண்டுகள் என்பதை நீட்டிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் H-4 வகை விசா வைத்திருக்கும் அவர்களின் துணைவர்கள் வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

Also Read: நாசாவின் திட்டத்திற்கு தலைமை தங்கிய இந்திய வம்சாவளி பெண்.. சாதனை படைத்த ஸ்வாதி மோகன்

இந்த நடவடிக்கை மூலம் சம்பந்தப்பட்டவர்கள் வேலை தேடவும், சுயதொழில் ஈடுபடவும் மட்டுமல்லாமல் வாகன ஓட்டுநர் உரிமம் பெறவோ அல்லது வங்கி கணக்கு திறக்கவோ கூட முடியும். சமீபத்திய ஆய்வின் படி கிட்டத்தட்ட 1 லட்சம் இந்தியர்கள் அதில் பெரும்பாலும் பெண்கள் வேலை செய்வதற்கான பணி அனுமதியை வைத்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு தான் டிரம்ப் நிர்வாகத்தால் வெளியிடப்பட்ட வேலைவாய்ப்பு அங்கீகாரத் திட்டத்தை ரத்து செய்யும் சுற்றறிக்கையை ஜோ பைடன் நிர்வாகம் திரும்ப பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது, எல் -1 விசா வைத்திருப்பவர்களின் துணைவர்கள் அங்கு வேலை செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். இப்போது இதே நடைமுறை எச் -1 பி தொழிலாளர்களின் துணைவர்களுக்கும் பொருந்தும் என்று தெரிகிறது. அவர்களுக்கு வேலை செய்வதற்கான பணி அனுமதியும் வழங்கப்படும். இது ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கப்பட்ட எச்-1பி விசாக்களில் அதிகம் இடம் பிடித்த இந்தியர்களுக்கு முக்கியமான செய்தியாக பார்க்கப்படுகிறது.

இப்போதைய நிலையில் எச்-1 பி விசா வைத்திருப்பவர்களின் துணைவர்களுக்கான பணி அனுமதி என்பது எல்லா துறைக்கும் பரவலாக அனுமதிக்கப்படுமா அல்லது தேவை உள்ள சில துறைகளுக்கு மட்டுமா என்பது தெளிவாக தெரியவில்லை. இருப்பினும் இப்படி எச்-1 பி விசா வைத்திருப்பவர்களின் துணைவர்களுக்கும் பணி அனுமதி வழங்கும் இந்த திட்டம் உள்ளூர் மக்களின் வேலைவாய்ப்பை பறிப்பதற்கு வாய்ப்பிருப்பதாகவும் ஒருசாரார் கருதுகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version