சினிமா செய்திகள்

கிறிஸ்துமஸ் விருந்தாக ‘ஸ்பைடர்மேன்’: அட்டகாசமான டிரைலர்!

Published

on

ஸ்பைடர்மேன் சாகசங்கள் குறித்து ஹாலிவுட்டில் பல திரைப்படங்கள் வந்திருந்தாலும் மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரித்த ஸ்பைடர்மேன் திரைப்படங்களுக்கு என ஒரு தனி வரவேற்பு இருக்கும். உலகம் முழுவதும் இந்த படங்கள் மிகப்பெரிய வசூலை குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மார்வெல் ஸ்டுடியோவின் ’ஸ்பைடர்மேன் ஹோம் கமிங்’ என்ற திரைப்படம் 2017 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் 2019ஆம் ஆண்டு ஃபார் ஃப்ரம் ஹோம்’ என்ற ஸ்பைடர்மேன் திரைப்படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ஸ்பைடர்மேன் படத்தின் அடுத்த பாகம் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இரண்டு நிமிடங்களுக்கு மேலாக ஓடும் இந்த ட்ரைலரில் பல்வேறு சாகச காட்சிகள் வழக்கம் போல் இருக்கின்றன என்பதும் சுவாரஸ்யத்திற்கு குறைவில்லாத காட்சிகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

வழக்கம்போல் ஸ்பைடர்மேன் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், வில்லனின் அட்டுழியங்கள், ஸ்பைடர்மேன் மற்றும் வில்லன் மோதிக்கொள்ளும் காட்சிகள் இந்த படத்திலும் உள்ளன. குறிப்பாக இந்த படத்தில் அனிமேஷன் காட்சிகள் மிரள வைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’ஸ்பைடர்மேன் நோ வே ஹோம்’ என்ற திரைப்படம் டிசம்பர் 17ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் விருந்தாக உலகம் முழுவதும் தமிழ் உள்பட இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மற்ற ’ஸ்பைடர்மேன் திரைப்படங்கள் போலவே இந்த திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version