ஆரோக்கியம்

காரசாரமான மலபார் சிக்கன் ரோஸ்ட்: வீட்டிலேயே எளிதாக செய்யலாம்!

Published

on

கேரளா உணவு அதன் சுவையான தன்மையால் பிரபலமாக இருப்பது நாம் அறிந்ததே. குறிப்பாக தேங்காய் எண்ணெய்யில் செய்யப்படும் கேரளா உணவுகளை சுவைத்து பார்த்தவர்களுக்கு மறக்க முடியாது. இன்று நாம் காரசாரமான மலபார் சிக்கன் ரோஸ்ட்டை சிக்கன் லெக் பீஸைக் கொண்டு எப்படி வீட்டிலேயே எளிதாக செய்யலாம் என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம் – 20-25
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – 1 துண்டு
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 1 1/2 டீஸ்பூன்
சமையல் எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

சிக்கன் மரினேட் செய்ய தேவையான பொருட்கள்:

சிக்கன் லெக் பீஸ் – 6
அரிசி மாவு – 2 டீஸ்பூன்
சோள மாவு – 2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
மிளகு தூள் – 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

  • முதலில் சிக்கன் லெக் பீஸை நன்றாக கழுவி சுத்தம் செய்து, கத்தியால் ஆங்காங்கே கீறுங்கள்.
  • சிக்கனில் எலுமிச்சை சாறு, இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகு தூள், அரிசி மாவு, சோள மாவு மற்றும் உப்பை சேர்த்து நன்றாக கலக்கி, அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  • கடாயில் சமையல் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, மரினேட் செய்த சிக்கனை மிதமான தீயில் நன்றாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின்னர், வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், பச்சை மிளகாய், இஞ்சியை சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கி, அதில் பொரித்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து, மிளகு தூள் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறி இறக்கினால் காரசாரமான மலபார் சிக்கன் ரோஸ்ட் ரெடி!

 

Poovizhi

Trending

Exit mobile version