ஆரோக்கியம்

குளிர், இருமலுக்கு சிறந்த மருந்து – காரசாரமான செட்டிநாடு கோழி ரசம்!

Published

on

காரசாரமான செட்டிநாடு கோழி ரசம்: சளி, இருமலுக்கு ஆரோக்கியம்!

தென் மாவட்டங்களின் மதிய உணவின் அவசியமான பகுதி, ரசம் இல்லாமல் முழுமையடையாது. மிளகு ரசம், தக்காளி ரசம் போன்றவைகள் எத்தனையோ இருந்தாலும், செட்டிநாடு ஸ்டைல் கோழி ரசம் மிகவும் தனித்துவமானது. இது உங்கள் வீட்டில் செய்யப்படாமல் இருந்தால், இந்த ரெசிபியை படித்து, செய்து பாருங்கள்.

காரசாரமான சுவை கொண்ட இந்த செட்டிநாடு கோழி ரசம் பருவ மழை காலத்தில் சளி, இருமல் போன்ற தொந்தரவுகள் இருந்தால் மிகச் சிறந்த தீர்வு. இந்த ரசத்தை சாப்பிடுவதால் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தருவதோடு, விரைவில் குணமடைய உதவும். குறிப்பாக, குழந்தைகளுக்கு மழை காலத்தில் ஏற்படும் சளி, இருமல் போன்ற பிரச்சனைகளைக் குறைக்கவும் இதை வழங்கலாம்.

தேவையான பொருட்கள்:

கோழி: 1/2 கிலோ
தனியா தூள்: 1/2 ஸ்பூன்
மிளகு தூள்: 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள்: 3/4 ஸ்பூன்
வெந்தயம்: 1/2 ஸ்பூன்
மிளகு: 1/2 ஸ்பூன்
பச்சை மிளகாய்: 4
பட்டை: 1 துண்டு
கிராம்பு: 2
ஏலக்காய்: 2
இஞ்சி பூண்டு பேஸ்ட்: 1 ஸ்பூன்
வெங்காய விழுது: 200 கிராம்
தக்காளி: 100 கிராம்
கறிவேப்பிலை: சிறிதளவு
புளி: சிறிதளவு
உப்பு: சுவைக்கு ஏற்ப
எண்ணெய்: தேவையான அளவு
தண்ணீர்: தேவையான அளவு

செய்முறை:

  • முதலில், கோழியை நன்றாக கழுவி நறுக்கி கொள்ளுங்கள்.
  • புளியை சூடான நீரில் 20 நிமிடம் ஊறவைத்து, சாற்றை எடுத்துவையுங்கள்.
  • கடாயில் எண்ணெய் சூடாகியவுடன் ஏலக்காய், கிராம்பு, பட்டை ஆகியவற்றை தாளியுங்கள்.
  • பின்னர், பச்சை மிளகாய், வெங்காய விழுது, நறுக்கிய தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • இப்போது தனியா தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • இதனுடன் கோழியை சேர்த்து, அது நன்றாக வதங்கிய பிறகு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடுங்கள்.
  • பிறகு, புளி கரைசலை சேர்க்கவும். சில நிமிடங்கள் கழித்து சிக்கனை எடுத்து, நறுக்கி, ரசத்தில் சேர்க்கவும்.
  • அவ்வளவுதான்! ருசியான, ஆரோக்கியமான செட்டிநாடு கோழி ரசம் தயார்.
Poovizhi

Trending

Exit mobile version