சினிமா செய்திகள்

அஜித் ரசிகர்களுக்கு இன்று ஸ்பெஷல் ட்ரீட்!

Published

on

பிகில் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையே பலத்த மோதல் நிலவியது. இந்நிலையில், இன்று அஜித் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் நேர்கொண்ட பார்வை படத்தின் ”வானில் இருள்” என்ற பாடலின் லிரிக் வீடியோ இன்று காலை 7.45 மணிக்கு வெளியாகி உள்ளது.

பொதுவாக மாலை நேரங்களில் தான் படத்தின் அப்டேட்ஸ் மற்றும் பாடல்கள் வெளியிடுவார்கள். போனி கபூர் செண்டிமெண்ட் இதில், அடங்கியுள்ளதா போன்ற கேள்விகள் எழுகிறது.

எதுவாக இருந்தாலும், அஜித் ரசிகர்கள் காலையில், எழுந்தவுடனே நேர்கொண்ட பார்வையின் பாடலை கேட்டு, இந்த நாளையும் சமூக வலைதளங்களில் தல நாளாக மாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எச். வினோத் இயக்கத்தில் அஜித், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி திரைக்கு வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version