தமிழ்நாடு

கார்களை மாற்றி மாற்றி பயணம்: ராஜேந்திர பாலாஜியை பிடிக்க கேரளா, பெங்களூருக்கு தனிப்படைகள் விரைவு!

Published

on

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றும், தனிப்படை போலீசாரிடம் இருந்து தப்பிக்க அவர் மாற்றி மாற்றி கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு பயணம் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் பால்வளத் துறை உள்பட பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவரை கைது செய்ய காவல்துறை 6 தனிப்படைகள் அமைத்தது என்பதும் இந்த தனிப்படைகள் பெங்களூர் உள்பட பல பகுதிகளில் ராஜேந்திரபாலாஜியை தேடி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் போலீசாரிடம் இருந்து தப்பிக்க ராஜேந்திரபாலாஜி கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களுக்கு இடையே காரை மாற்றி மாற்றி பயணம் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அடிக்கடி ராஜேந்திர பாலாஜி வெவ்வேறு காரை மாற்றி பயணம் செய்வதால் அவர் போலீசாரின் கண்களில் படாமல் தப்பித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் முன்ஜாமீன் வேண்டி ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்னும் ஓரிரு நாளில் விசாரணைக்கு வர உள்ளது. இந்த விசாரணைக்கு முன்பு அவரை கைது செய்ய வேண்டும் என தனிப்படைகள் தீவிரமாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version