தமிழ்நாடு

வெளிநாட்டுக்கு தப்பிவிட்டாரா ராஜேந்திர பாலாஜி? கடல், ஆகாய மார்க்கத்தில் தேடும் தனிப்படைகள்!

Published

on

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டும், அனைத்து தனி படைகளுக்கும் தண்ணி காட்டி ராஜேந்திர பாலாஜி இன்னும் கைது ஆகாமல் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆவின் பால் துறை உள்பட பல துறைகளில் வேலை வாங்கி தருவதாக ரூபாய் மூன்று கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்ய தீவிரமாக இருந்தனர்.

இந்த நிலையில் ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து அவரை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் தலைமறைவாக இருக்கும் ராஜேந்திர பாலாஜி கார்களில் மாறி மாறி பெங்களூர் மற்றும் கேரளாவிற்கு பயணம் செய்வதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் அவர் கடல் மார்க்கமாகவும் ஆகாய மார்க்கமாகவும் சுற்றி வந்து கொண்டிருக்கிறார் என்று வந்த தகவலை அடுத்து தனிப்படைகள் கடல் மார்க்கமாக மார்க்கத்திலும் தேடி வருவதாகவும் கூறப்பட்டது. இந்தநிலையில் ராஜேந்திர பாலாஜி வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

சுப்ரீம் கோர்ட்டில் முன்ஜாமின் மனு கிடைக்கும்வரை கைதாக கூடாது என்பதில் ராஜேந்திரபாலாஜி தீவிரமாக இருப்பதாகவும் அதே நேரத்தில் ராஜேந்திர பாலாஜியை கைது செய்து ஒரு நாளாவது சிறையிலடைக்க வேண்டும் என்ற தீவிரத்தில் காவல்துறையின் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ராஜேந்திர பாலாஜி மற்றும் காவல்துறையினர் இடையே நடந்து வரும் இந்த ஆடுபுலி ஆட்டம் எப்போது முடிவுக்கு வரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

seithichurul

Trending

Exit mobile version