இந்தியா

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சிறப்பு தரிசனம்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!

Published

on

ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளி உள்ளிட்டவர்களுக்கு சிறப்பு தரிசனம் அனுமதிக்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு முன்பாக மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், சிறு குழந்தையுடன் வரும் பெற்றோர்கள் தரிசனம் செய்வதற்கு சிறப்பு வாயில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அமைக்கப்பட்டு இருந்தது.

ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து விட்டதால் மீண்டும் மாற்றுத்திறனாளிகள் மூத்த குடிமக்கள் மற்றும் குழந்தையுடன் வரும் பக்தர்களுக்கு சிறப்பு தரிசனம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இதற்காக ஸ்பெஷல் வாசல் அமைக்கப்பட்டுள்ளதாகவும் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இதன்படி திங்கள் முதல் வியாழக்கிழமை வரையும், சனிக்கிழமைகளில் காலை 10 மணிக்கு கோவிலுக்கு தெற்கு மாட வீதியில் உள்ள சிறப்பு வரிசையில் பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை மட்டும் மாலை 3 மணிக்கு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

 

seithichurul

Trending

Exit mobile version