தமிழ்நாடு

சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்: ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய வசதி!

Published

on

கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கும், கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு பேருந்துகள் நிறுத்தப்பட்டது என்பதும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பேருந்து போக்குவரத்து தொடங்கியது என்பதும் தெரிந்ததே. தற்போது சென்னை உள்பட தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கும் திருவனந்தபுரம் உள்பட கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு பேருந்து போக்குவரத்து தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது கார்த்திகை மாதம் என்பதால் சபரிமலைக்கு மாலை அணிவித்து செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை அடுத்து தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

சபரிமலைக்கு செல்லும் சிறப்புப் பேருந்துகளில் பயணம் செய்யும் பக்தர்கள் http://tnstc.in, http://redbus.in, http://busindia.com, http://paytm.com ஆகிய இணையதளங்கள் மூலம் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் முன்பதிவு செய்து தங்கள் பயணத்தை உறுதி செய்து கொள்ளலாம் என்றும் அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் இந்த பேருந்துகளை பயன்படுத்தி வசதியான பயணத்தை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version