தமிழ்நாடு

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை: 1000 சிறப்பு பேருந்துகள்

Published

on

செப்டம்பர் 10-ஆம் தேதி தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது என்பது தெரிந்ததே. செப்டம்பர் 10-ஆம் தேதி என்பது வெள்ளிக்கிழமை என்பதால் அதனை அடுத்த சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் அரசு விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து மூன்று நாட்கள் தொடர் விடுமுறை கிடைப்பதை அடுத்து சென்னையில் உள்ள ஏராளமான தங்களுடைய சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விநாயகர் சதுர்த்தி அன்று சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள் வசதிக்காக தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

விநாயகர் சதுர்த்தி சிறப்பு பேருந்துகள் அதிகளவில் இயக்கப்படும் என்றும் எனவே பொதுமக்கள் எந்த வித சிரமும் இன்றி தங்களது ஊர்களுக்கு செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து வழக்கமாக இயக்கப்படும் 2250 பேருந்துகள் இயக்கப்படுவதோடு, விரைவு போக்குவரத்து கழகம் விழுப்புரம், கும்பகோணம், சேலம் உள்ளிட்ட போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 1,000 சிறப்பு பஸ்களை இயக்க முடிவு செய்திருப்பதாக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

அவற்றில் இன்று 100 பேருந்துகள், நாளை 300 பேருந்துகள் 9ஆம் தேதி 600 பேருந்துகள் விடப்படும் என்றும் தேவைப்பட்டால் கூடுதலாக பேருந்துகளை இயக்கவும் தயாராக இருப்பதாகவும் தமிழ்நாடு அரசு பேருந்து போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

அதேபோல விநாயகர் சதுர்த்தி விடுமுறை முடிந்து சென்னைக்கு திரும்பி வர வசதியாகவும் போதிய அளவில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

seithichurul

Trending

Exit mobile version