உலகம்

சசிகலாவிற்கு சிறையில் சொகுசு வசதி கொடுக்கப்பட்டது உண்மையே.. உயர்மட்டக்குழு அறிக்கை!

Published

on

பெங்களூர்: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்யப்பட்டது உண்மையே என்று கர்நாடக அரசின் உயர்மட்டக்குழு விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா மற்றும் இளவரசி அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு அங்கே சொகுசு வசதி செய்து தரப்பட்டு இருப்பதாக நிறைய புகார்கள் எழுந்தது.

அவர்கள் அடிக்கடி வெளியே சென்று வருவதாகவும் புகார்கள் வந்தது. இந்த நிலையில் சசிகலா சொகுசு வசதி பெற்று இருக்கிறாரா என்று ஆராய, ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

கடந்த ஆண்டு சிறைத்துறை டி.ஐ.ஜி-யாக இருந்த ரூபாதான் முதல்முறையாக இதுகுறித்து குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்காக ரூ.2 கோடி லஞ்சம் வாங்கப்பட்டுள்ளது என்றும், சிறைத்துறை டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் மீதும் அவர் குற்றம்சாட்டினார். இதன்பின்பே இதை விசாரிக்க குழு அமைக்கப்பட்டது. இந்த குழு தாக்கல் செய்ய அறிக்கையின் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version