இந்தியா

இடைக்கால சபாநாயகராக மேனகா காந்திக்கு வாய்ப்பு!

Published

on

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. பாஜக மட்டும் தனித்து 303 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க தேவையான இடங்களை பெற்றது. இதனையடுத்து பிரதமர் மோடி மீண்டும் இரண்டாவது முறையாக பிரதமராக இன்று பதவியேற்றார்.

வெகு விமரிசையாக கொண்டாடப்படும் இந்த பதவியேற்பு விழாவில் பல நாட்டு தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். பல மாநில முதல்வர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள், உலக தலைவர்கள் பலரும் இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

சரியாக 7 மணிக்கு விழா மேடைக்கு வந்த பிரதமர் மோடிக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதனையடுத்து இரண்டாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்றார். மோடி பதவியேற்ற பின்னர் அவரது அமைச்சரவை அமைச்சர்கள் பதவியேற்றனர்.

இன்று மொத்தம் 58 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர். 25 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 24 பேர் இணை அமைச்சர்களாகவும், 9 பேர் சிறப்பு அமைச்சர்களாகவும் என 58 பேர் இன்று அமைச்சர்களாக பதவியேற்றனர். ஆனால் கடந்த 2014-ஆம் ஆண்டு மத்திய அமைச்சராக பதவியேற்ற மேனகா காந்தி உள்ளிட்ட சில முக்கிய தலைவர்களுக்கு இந்தமுறை அமைச்சரவையில் இடமளிக்கப்படவில்லை.

ஆனால் இடைக்கால சபாநயகராக முன்னாள் அமைச்சர் மேனகா காந்தி நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஊடகங்களுக்கு தகவல் கசிந்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version