செய்திகள்

வெளிய போகணும்னா போங்க!…எதுக்கு பில்டப்?.. பாஜக எம்.எல்.ஏக்களை கலாய்த்த சபாநாயகர்….

Published

on

தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசு பல மாதங்களுக்கு முன்பு ஆளுனருக்கு அனுப்பியது. ஆனால், அதில் எந்த முடிவும் எடுக்காமலும், குடியரசு தலைவருக்கு அனுப்பாமலும் தமிழக ஆளுநர் சமீபத்தில் அதை தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பினார். இந்த விவகாரம் கடும் விவாதத்தை ஏற்படுத்தியது.

எனவே, அனைத்து கட்சி கூட்டத்தை திமுக கூட்டி அதில், மீண்டும் சட்டசபை கூட்டி நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி ஆளுனருக்கு அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது. அதன்பின் இன்று சட்டசபையில் சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டு மசோதாவை திமுக அரசு நிறைவேற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

வெளியேறுவதற்கு முன்பு தமிழக அரசு கொண்டு வந்த நீட் விலக்கு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் பேசினார். அப்போது, அதை இடைமறித்த சபாநாயகர் அப்பாவு ‘வெளியேற முடிவெடுத்து விட்டால் வெளியேறுங்கள்.. எதற்கு பில்டப்?’ என நக்கலடித்தார். இதைக்கேட்டு சட்டசபையில் சிரிப்பொலி எழுந்தது.

seithichurul

Trending

Exit mobile version