தமிழ்நாடு

பட்ஜெட் கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும்? சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!

Published

on

தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் 13ஆம் தேதி தொடங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இது குறித்த கூடுதல் விவரங்களை சபாநாயகர் அப்பாவு அவர்கள் தெரிவித்துள்ளார்

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து ஆலோசிக்க அலுவல் ஆய்வு குழு கூட்டம் இன்று கூடியது.

இந்த அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் ஆகஸ்ட் 13 முதல் செப்டம்பர் 21ஆம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டுள்ளது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். ஆகஸ்ட் 13ஆம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாகவும் இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தாக்கல் செய்யப் படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

அதேபோல் மறுநாள் அதாவது ஆகஸ்ட் 14ஆம் தேதி வேளாண்மைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் இந்த பட்ஜெட்டையும் நிதியமைச்சர் தாக்கல் செய்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் முதல் முறையாக காகிதம் இல்லாத இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் அனைவருக்கும் டேப் வழங்கப்படும் என்றும் அதில் புத்தகவடிவில் பட்ஜெட் தகவல்கள் இடம்பெறும் என்றும் சபாநாயகர் அப்பா அவர்கள் தெரிவித்துள்ளார்
இந்த நிலையில் இன்று நடைபெற்ற அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் அதிமுக கலந்து கொள்ளாதது குறித்து சபாநாயகர் அப்பாவு கூறிய போது ’அது அவர்களது விருப்பம்’ என்று தெரிவித்தார்.

Trending

Exit mobile version