Connect with us

உலகம்

செவ்வாய் செல்லும் கனவு.. வெடித்து சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மாதிரி ராக்கெட்.. வைரலாகும் வீடியோ!

Published

on

வாஷிங்டன் : ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்புவதற்கான முன்மாதிரி ராக்கெட் ஒன்று சோதனையின் போது வெடித்து சிதறியுள்ளது. கடந்த டிசம்பர் இதே நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் ராக்கெட் வெடித்து சிதறியதும் குறிப்பிடத்தக்கது.

உலகின் பெரும் பணக்காரரான எலான் மாஸ்க் நிறுவிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளி துறையில் பல்வேறு புதிய சாதனைகளை நிகழ்த்திக்கொண்டு உள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற முதல் தனியார் நிறுவனத்தின் விண்கலம் ஸ்பேஸ் எக்ஸ் உடையது தான். அதே போல கடந்த 2019 ஆம் ஆண்டு 143 செயற்கைகோள்களுடன் பிரமாண்ட பால்கன் ஏவுகணையை அந்த நிறுவனம் ஏவி சாதனை படைத்தது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மாஸ்கின் கனவு திட்டமான செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப வேண்டும் என்பதற்கான ஆராய்ச்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் தான் இது தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் ஸ்டர்ஷிப் ஏவுகணை ஒன்று சோதித்து பார்க்கப்பட்டது, ஆனால் அந்த ஏவுகணை சோதனை கட்டத்திலேயே வெடித்து சிதறியது. இப்போது மற்றொரு ஏவுகணையும் அதே போல் வெடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது. SN9 என அழைக்கப்படும் எஃகு ராக்கெட் டெக்சாஸின் போகா சிகாவிலிருந்து ஏவப்பட்டது. இந்த இடம் அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷனுக்கு சொந்தமான இடமாகும். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் கடந்த முறை ராக்கெட் ஏவும் பொழுது விதிமுறைகளை மீறியிருந்ததாக கருதப்பட்டதால் இம்முறை அந்நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

உள்ளூர் நேரப்படி சரியாக பிற்பகல் 3.30 மணிக்கு ராக்கெட் ஏவப்பட்டு 10 கிமீ உயரத்தை அடைந்த பின்னர் அதன் என்ஜின் வேகம் படிப்படியாக குறைக்கப்பட்டு கிடைமட்ட நிலையில் வைத்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் ராக்கெட்டை தரையிறக்குவதற்காக செங்குத்தாக திருப்ப முயற்சிக்கும் போது தான் பிரச்சனை தொடங்கியுள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோவில் அந்த ராக்கெட் தவறான திசையில் மிக வேகமாக தரையிறங்கியுள்ளது. இதனால் தரையில் மோதியவுடன் ராக்கெட் வெடித்து சிதறியது. சிறிது நேரத்திற்கு அந்த பகுதி முழுவதும் ஆரஞ்சு நிற தீப்பிழம்புகள் எரிந்தன. ஆனால் அதிர்ஷ்டவசமாக வேறு எங்கும் தீ பரவவில்லை.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் அறிவிப்பாளர் ஒருவர் இதுகுறித்து கூறும்பொழுது, நாங்கள் மற்றொரு சிறந்த ஏவுகணையை மீண்டும் வடிவமைத்தோம், ஆனால் தயிராக்குவதில் மட்டும் சிறிது மேம்படுத்த வேண்டியுள்ளது என்றார். இருப்பினும் 120 அடி உயரம் கொண்ட மறுபயன்பாட்டு ராக்கெட் அமைப்பு நிச்சயம் ஒருநாள் குழு நபர்கள் மற்றும் சரக்குகளை ஏற்றிக்கொண்டு சந்திரனுக்கும், செவ்வாய் கிரகத்திற்கும் அதற்கு அப்பாலும் பறக்க செய்யும் என்று அந்நிறுவனம் நம்புகிறது.

வணிகம்7 மணி நேரங்கள் ago

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மீண்டும் பணி நீக்கம்!

வணிகம்8 மணி நேரங்கள் ago

வருமான வரி தாக்கலில் இருந்து இவர்களுக்கு மட்டும் விலக்கு! எப்படி?

தினபலன்10 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் (ஜூலை 19, 2024)

இந்தியா18 மணி நேரங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்18 மணி நேரங்கள் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா19 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்19 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை3 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

பல்சுவை6 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!