உலகம்

செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்ப இருந்த சோதனை ராக்கெட் வெடித்து சிதறல்!

Published

on

செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்ப எலன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தயாரித்த ராக்கெட் வெடித்துச் சிதறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசா, பல்வேறு தனியார் நிறுவனங்களுடன் இணைந்து ராக்கெட் தயாரிப்புகள் மற்றும் விண்வெளி சுற்றுலா பயணம் போன்றவற்றுக்கான ஆய்வுகளை நடத்தி வருகிறது.

அதில் ஒன்றான செவ்வாய்க் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தயாராகி வருகிறது. அதற்காக ஸ்டார்ஷிப் என்ற விண்கலத்தை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

அதற்கான சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்ற நிலையில், எந்த சிக்கலும் இல்லாமல் புறப்பட்ட விமானம் தரையிறங்கும் போது வெடித்து சிதறியது. மனிதர்கள் இல்லாத ஆளில்லா சோதனை விண்கலம் என்பதால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.

அண்மையில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ராக்கெட் மூலம், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு விண்வெளி வீரர்கள் அழைத்துச் செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version