இந்தியா

பயணிகள் வரத்துக் குறைவு.. ரயில்களை ரத்து செய்த தெற்கு ரயில்வே!

Published

on

கொரோனா தொற்று பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக ரயிலில் பயணிக்கும் எண்ணிக்கைகள் குறைந்துள்ளன. எனவே பல்வேறு வழித்தடங்களில் ரயில்களை ரத்து செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது தெற்கு ரயில்வே.

சென்னை -பெங்களூரு இடையில் தினமும் சென்று வந்த சதாப்தி ரயில் ஏப்ரல் 28-ம் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது.

மங்களூரில் இருந்து மதியம் 2.20-க்கு கிளம்பி மும்பை லோக்கமானியா திலக் ரயில் நிலையம் வரை செல்லும் ரயில் எண் 02620 ஏப்ரல் 29-ம் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது.

அதே போன்று மும்பை லோக்கமானியா திலக் ரயில் நிலையத்திலிருந்து மங்களூருக்கு வரும் 02619 ரயில் ஏப்ரல் 30-ம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மைசூரு – ரேனிகுண்டா வாராந்திர சிறப்பு ரயில் மே 28 முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

குறைந்த அளவில் மட்டும் ரயில் பயணிகள் டிக்கெட் புக் செய்ததால், ரயிலை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version