தமிழ்நாடு

தீபாவளி பண்டிகை எதிரொலி: சிறப்பு ரயில்கள், கூடுதல் பெட்டிகள் இணைப்பு குறித்த தகவல்!

Published

on

தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையில் உள்ள பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர் நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதியை கணக்கில் கொண்டு தமிழக அரசு ஏற்கனவே சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

அதேபோல் தென்னிந்திய ரயில்வே சிறப்பு ரயில்கள் மற்றும் ஒரு சில ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி ஒரு சில சிறப்பு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளதாகவும் சிறப்பு ரயில்கள் கூடுதலாக இயக்கப்பட்டு உள்ளதாகவும் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

1. மைசூரிலிருந்து நவம்பர் 1 முதல் நவம்பர் 3ஆம் தேதி வரை புறப்படும் வண்டி எண் 06236 மைசூர் – தூத்துக்குடி சிறப்பு ரயிலிலும், தூத்துக்குடியிலிருந்து நவம்பர் 2 முதல் நவம்பர் 4ஆம் தேதி வரை புறப்படும் வண்டி எண் 06235 தூத்துக்குடி-மைசூர் சிறப்பு ரயிலிலும் ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி கூடுதலாக இணைக்கப்படுகிறது.

2. சென்னை எழும்பூரில் இருந்து நவம்பர் 3ஆம் தேதி புறப்படும் வண்டி எண் 06105 சென்னை எழும்பூர்-திருச்செந்தூர் சிறப்பு ரயிலிலும் திருச்செந்தூரில் இருந்து நவம்பர் 7ஆம் தேதி புறப்படும் வண்டி எண் 06106 திருச்செந்தூர்-சென்னை எழும்பூர் செந்தூர் சிறப்பு ரயிலிலும் திருநெல்வேலி ரயில் நிலையம் வரை ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்படுகிறது.

3. சென்னை எழும்பூரில் இருந்து நவம்பர் 3ஆம் தேதி புறப்படும் வண்டி எண் 06101 சென்னை எழும்பூர்-கொல்லம் சிறப்பு ரயில் செங்கோட்டை ரயில் நிலையம் வரை ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி கூடுதலாக இணைக்கப்படுகிறது.

சிறப்பு ரயில்கள்:

1. சென்னை எழும்பூர்-நாகர்கோவில் சிறப்பு கட்டண ரெயில் (வண்டி எண்:06037), இன்று (செவ்வாய்கிழமை) இரவு 10.05 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும். இந்த ரயில் நாளை காலை 11 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். அதேபோல் மறுமார்க்கமாக நாகர்கோவில்-எழும்பூர் சிறப்பு கட்டண ரெயில் (06038), வரும் 5-ந்தேதி மதியம் 3.10 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 5.20 மணிக்கு சென்னை வந்தடையும்.

2. தாம்பரம்-நெல்லை சிறப்பு கட்டண ரெயில் (06039), வரும் 8-ந்தேதி மாலை 4 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3 மணிக்கு நெல்லை சென்றடையும். இதைப்போல் நெல்லை-தாம்பரம் சிறப்பு கட்டண ரெயில் (06040) வரும் 7-ந்தேதி மாலை 7 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு, காலை 7.55 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

இவ்வாறு தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version