தமிழ்நாடு

நவம்பர் 25 முதல் பல ரயில்களில் முன் பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்படும் என ரயில்வே அறிவிப்பு

Published

on

சென்னை – காரைக்குடி பல்லவன், சென்னை – மதுரை வைகை எக்ஸ்பிரஸ், சென்ட்ரல் – கோவை இண்டர்சிட்டி, தாம்பரம் – நாகர்கோயில் அந்தோத்யா ரயில்களில் பொதுப்பெட்டிகள் இணைக்கப்படும்

தமிழகத்தில் ஓடும் 9 ரயில்களில் முன் பதிவு இல்லாத பெட்டிகள்: முழு விபரங்கள்

தமிழகத்தில் ஓடும் 9 ரயில்களில் கூடுதலாக முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகள் இணைக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்ட போது முன்பதிவில்லாத ரயில் பெட்டிகள் வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து விட்டதை அடுத்து மீண்டும் முன்பதிவில்லாத ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டு வருகின்றன என்பது குறிபிடத்தக்கது

ஏற்கனவே நாடு முழுவதும் பல ரயில்களில் முன்பதிவில்லாத ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளது. இதனை அடுத்து தற்போது தமிழகத்தில் 9 ரயில்களில் முன்பதிவு ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

நவம்பர் 25ஆம் தேதி முதல் பல ரயில்களில் முன்பதிவில்லாத ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. அந்த ரயில்களின் விபரங்கள் பின்வருமாறு:

1. மதுரை – புனலூர்

2. மங்களூர் – கோவை

3. மங்களூர் – நாகர்கோவில்

4. சென்னை – காரைக்குடி

5. சென்னை – மதுரை (வைகை எக்ஸ்பிரஸ்)

6. தாம்பரம் – நாகர்கோவில்

7. சென்னை – கோவை

8. நெல்லை – பாலக்காடு

9. மங்களூர் – நாகர்கோவில்

 

seithichurul

Trending

Exit mobile version