தமிழ்நாடு

தமிழகத்தில் இருந்து செல்லும் 4 ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Published

on

பராமரிப்பு காரணங்கள் உள்பட பல்வேறு காரணங்களால் ரயில்கள் ரத்து செய்யப்படுவது குறித்த தகவல்களை அவ்வப்போது பார்த்து வருகிறோம். அந்த வகையில் தமிழகத்தில் இருந்து கிளம்பும் 4 ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ‘பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழகத்தில் இயங்கும் 4 ரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் இன்று முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை தற்காலிகமாக இந்த ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும் பிப்ரவரி 1 முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட ரயில்கள் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

இன்று முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விபரங்கள் பின்வருமாறு:

1. திருப்பதி-காட்பாடி (07661) இடையே இரவு 7.25 மணிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் தற்காலிக ரத்து

2. காட்பாடி-திருப்பதி (07662) இடையே காலை 6.15 மணிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில்கள் இன்று முதல் 31ம் தேதி வரை தற்காலிக ரத்து

3. பித்ரகுண்டா-சென்னை சென்ட்ரல் (17237) இடையே காலை 4.45 மணிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில்கள் தற்காலிக ரத்து

சென்னை சென்ட்ரல்- பித்ரகுண்டா (17238) இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில் இன்று முதல் 31ம் தேதி வரை தற்காலிகமாக ரத்து

மேற்கண்ட தகவல்களை அறிந்து பயணிகள் தங்கள் பயணத்திட்டத்தை மாற்றி கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version