தமிழ்நாடு

தமிழக ரயில்வேயில் இனி தமிழ் பேசக்கூடாது: தென்னக ரயில்வே சுற்றறிக்கை!

Published

on

இந்தி திணிப்புக்கு எதிரான குரல்கள் தமிழகத்தில் ஒலித்துவரும் வேளையில் தற்போது தென்னக ரயில்வே அனுப்பியுள்ள சுற்றறிக்கை ஒன்று சர்ச்சைக்கு மீண்டும் வித்திட்டுள்ளது. அந்த அறிக்கையில், தென்னக ரயில்களின் தொடர்புகொள்ளும் மொழிகளில் இருந்து தமிழை நீக்கியுள்ளது.

புதிய கல்விக்கொள்கையில் மும்மொழி கொள்கை கொண்டு வரப்பட்டதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மும்மொழி கொள்கைப்படி ஹிந்தி கட்டாய பாடமாக திணிக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தின் எதிர்ப்பால் அது தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 12-ஆம் தேதி தென்னக ரயில்வே வெளியிட்ட அறிக்கை அதேபோன்ற ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஸ்டேஷன் மாஸ்டர்கள், கட்டுப்பாட்டு அறையுடன் பேச இந்தி அல்லது ஆங்கிலத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும், தமிழ் போன்ற உள்ளூர் மொழிகளை பயன்படுத்த கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழில் பேசும்போது பணியில் உள்ள ஒரு சில வெளிமாநில பணியாளர்களால் தமிழை புரிந்துகொள்ள முடியாததால் ஆங்கிலம் அல்லது இந்தி மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெளிமாநிலத்தவர்கள் புரிந்துகொள்வதற்காக தென்னக ரயில்வேயில் இருந்து தமிழை நீக்கியுள்ளது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version