தமிழ்நாடு

தொடங்கியது தென்மேற்கு பருவமழை: மழை பெய்யும் என்ற அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி

Published

on

தற்போது அக்னி நட்சத்திர வெயில் கொளுத்தி வரும் நிலையில் கடந்த சில நாட்களாக அசானி புயல் காரணமாக மழை பெய்ததால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து உள்ளது. இந்த நிலையில் இந்த ஆண்டு முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்த நிலையில் இன்று முதல் அந்தமானில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இதனையடுத்து இந்தியா முழுவதும் இன்னும் ஒரு சில நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கி விடும் என்றும் ஜூன் முதல் வாரத்தில் நல்ல மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டதன் காரணமாக பல பகுதிகளில் இன்னும் 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

அக்னி நட்சத்திர வெயில் வரும் 28ஆம் தேதி வரை இருக்கும் நிலையில் அதற்கு முன்பே தென்மேற்கு பருவமழை தொடங்கி விடும் என்பதால் இந்த ஆண்டு வெப்பத்தின் தாக்கம் பெரிதாக இருக்காது என்பதே பொதுமக்களின் மகிழ்ச்சிக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version