சினிமா

சவுத் குயின் த்ரிஷா பிறந்தநாள்.. 40 வயதிலும் நச்சென இருக்குறாரே!

Published

on

நடிகை த்ரிஷா இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அதற்குள் த்ரிஷாவுக்கு 40 வயசாகிடுச்சா, நம்பவே முடியலையே என ரசிகர்கள் புலம்ப வேண்டாம். 1983ம் ஆண்டு சென்னையில் கிருஷ்ணன் மற்றும் உமா தம்பதியினருக்கு பிறந்த த்ரிஷா மிஸ் சென்னை பட்டத்தை வென்ற நிலையில், சினிமாவில் காலடி வைத்து கதாநாயகி ஆனார்.

சூர்யாவின் மெளனம் பேசியதே படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நடிகை த்ரிஷா சாமி, கில்லி, பீமா, கிரீடம், மங்காத்தா, திருப்பாச்சி, குருவி, விண்ணைத்தாண்டி வருவாயா, 96, ராங்கி, பேட்ட, பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 என பல படங்களில் நடித்துள்ளார்.

#image_title

லோகேஷ் கனகாராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் லியோ படத்திலும் த்ரிஷா தான் ஹீரோயின் என்பது குறிப்பிடத்தக்கது.

20 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் டாப் ஹீரோயினாக வலம் வரும் த்ரிஷா தனது 40வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் நடிகை த்ரிஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

#image_title

தமிழ், தெலுங்கு மொழிகளில் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உள்ள த்ரிஷா சீக்கிரமே சமந்தா, நயன்தாரா போல பாலிவுட் பக்கமும் செல்வாரா? என்கிற கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version