சினிமா செய்திகள்

இனிமேல் இந்திய சினிமா என்றால் தென்னிந்திய சினிமா தான்: கொட்டும் வசூல் மழை!

Published

on

ஒரு காலத்தில் இந்திய சினிமா என்றால் இந்தி சினிமா என்று தான் உலக நாடுகள் நினைத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது பாலிவுட் திரையுலகை தென்னிந்திய திரையுலகம் முந்திவிட்டதாகவே கருதப்படுகிறது .

கடந்த சில மாதங்களாக வெளிவந்துகொண்டிருக்கும் பாலிவுட் படங்கள் தோல்வியை சந்தித்து வரும் நிலையில் தென்னிந்திய படங்கள் மிகப்பெரிய சாதனையை வசூல் அளவில் செய்து வருகின்றன.

குறிப்பாக புஷ்பா, ஆர்.ஆர்.ஆர். கேஜிஎப் 2 ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது என்பது மட்டுமின்றி இந்தியிலும் இந்த படங்கள் வசூல் சாதனை செய்துள்ளது. அதேபோல் அஜித்தின் வலிமை, விஜய்யின் பீஸ்ட் ஆகிய திரைப்படங்களில் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து உள்ளது என்பதும் சிவகார்த்திகேயனின் ’டாக்டர்’ 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

தென்னிந்திய திரைப்படங்களும் தற்போது அதிக பட்ஜெட்டில் தயாரிக்கும் படங்களை எடுக்க தொடங்கி விட்டதால் பாலிவுட் திரையுலகை தென்னிந்திய திரை முந்திவிட்டதாக கருதப்படுகிறது. இன்னும் ஒரு சில ஆண்டுகளில் இந்திய திரையுலகம் என்றால் அது தென்னிந்திய திரையுலகம் தான் என்ற நிலை ஏற்படும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

 

seithichurul

Trending

Exit mobile version