இந்தியா

விளம்பர படத்தில் இருந்து கங்குலி அதிரடி நீக்கம்

Published

on

பிசிசிஐ தலைவர் கங்குலி நடித்த எண்ணெய்  விளம்பரப்படத்தை தற்போது நீக்கி உள்ளனர்.

முன்னாள் கிரிக்கெட் வீரரும், பிசிசிஐ தலைவருமான கங்குலி இதய மராடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள், பிரபல்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், கங்குலி நடித்த எண்ணெய் விளம்பர படத்தின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு முந்தையதாக எண்ணெய் விளம்பர படம் ஒன்றில் தான் இந்த எண்ணையை பயன்படுத்துவதாகவும் இதயம் ஆரோக்கியமாக இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார். தற்போது அவருக்கு மராடைப்பு ஏற்பட்டதால், அவர் நடித்த விளம்பர படத்தை சம்பந்தப்பட்ட எண்ணெய் கம்பெனி நீக்கி உள்ளது.

இதய பாதிப்பு உள்ளவர் இதயம் மற்றும் நல்வாழ்வு சம்மந்தம் உள்ள விளம்பரத்தில் நடிப்பது சரியாக இருக்காது என்பதால் அந்த விளம்பரம் நிறுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.. பொதுமக்களும் எண்ணெய் விளம்பரத்தை நிக்கியது சரியே போன்ற கருத்தை தெரிவித்து உள்ளனர். கங்குலி பூரண குணம் அடைந்து வீடு திரும்ப அவரது ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். முன்னதாக பிரதமர் மோடி போன் மூலமாக கங்குலி உடல்நிலையை பற்றி விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Trending

Exit mobile version