இந்தியா

இரவு நேர ஊரடங்கு பலனளிக்காது: விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன்!

Published

on

கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு பலன் அளிக்காது என்றும் பகலில் பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் சௌமியா சுவாமிநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக இந்தியாவில் உள்ள சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இரவு நேர ஊரடங்கு குறித்து கருத்து தெரிவித்த உலக சுகாதார அமைப்பின் தலைவர் செளமியா சுவாமிநாதன் அவர்கள் இரவு நேர ஊரடங்கு ஒமிக்ரான் வைரஸை கட்டுப்படுத்துவதில் பலனளிக்காது என்று பகலில் பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருந்து கொள்ள வேண்டும் கூறினார்.

மேலும் அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்தி கொள்வது, வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிந்து கொள்வது, கண்டிப்பாக தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது ஆகியவற்றில் கவனமாக இருக்க வேண்டும் என்றும், பகலில் இதை செய்யாமல் இரவில் மட்டும் ஊரடங்கு போடுவதால் எந்த பயனும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இரவில் சுமார் 80 சதவீத பொதுமக்கள் வீட்டில்தான் இருப்பார்கள் என்பதால் அந்த நேரத்தில் ஊரடங்கை அமல்படுத்துவதை விட பகலில் அதிக மக்கள் நடமாடும் நேரத்தில் அவர்களை ஜாக்கிரதையாக இருக்க அறிவுறுத்த வேண்டும் என்பதே மருத்துவ வல்லுனர்களின் கருத்தாக உள்ளது என்பது குறிபிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version