இந்தியா

சொர்க்கவாசல் தரிசனத்திற்கு இலவச டோக்கன்: திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

Published

on

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 10 நாட்கள் சொர்க்க வாசல் திறந்து இருக்கும் என்பதால் சொர்க்க வாசல் தரிசனம் செய்ய இன்று முதல் உள்ளூர் பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

ஜனவரி 13ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை திருமலை ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கும் என்பதை முன்னிட்டு ஏற்கனவே 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் மற்றும் இலவச தரிசன டிக்கெட்டுகள் வெளியூர் பக்தர்களுக்கு ஆன்லைனில் வெளியிடப்பட்டது என்பதும் இந்த டோக்கன்களை பக்தர்கள் போட்டி போட்டி வாங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திருப்பதி மற்றும் திருமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த உள்ளூர் பக்தர்களுக்கு இன்று முதல் வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் தரிசனம் செய்ய இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்றும் தினமும் 5000 என்ற எண்ணிக்கையில் 10 நாட்களுக்கு 50 ஆயிரம் இலவச தரிசன டோக்கன் வழங்கப்படும் என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இந்த டோக்கன்களை பெறுவதற்காக கவுண்டர்களில் ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று காத்து இருக்கின்றனர் என்பதும் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து டோக்கன்களை வாங்கிச் செல்லும்படி திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்று காலை 9 மணி முதல் இலவச டோக்கன் வழங்கப்படும் என திருமலை தேவஸ்தானம் அறிவித்திருந்த நிலையில் நேற்றே கவுண்டர்களில் பொதுமக்கள் குவிந்ததால் நேற்று மாலையே டோக்கன் வழங்கும் பணி தொடங்கப்பட்டது என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.

seithichurul

Trending

Exit mobile version