சினிமா செய்திகள்

’சூரரைப்போற்று’ இந்தி ரீமேக்கில் நாயகன், நாயகி அதிகாரபூர்வ அறிவிப்பு!

Published

on

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான சூரரைப்போற்று என்ற திரைப்படம் கடந்த 2020 ஆம் ஆண்டு அமேசான் ஓடிடியில் வெளியானது என்பதும் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பதும் தெரிந்ததே.

இந்த படத்தின் இந்தி ரீமேக் விரைவில் உருவாக இருப்பதாகவும் அதனை சுதா கொங்கராவே இயக்க இருப்பதாகவும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 25ஆம் தேதி தொடங்கும் என்று சமீபத்தில் விகடனுக்கு அளித்த பேட்டியில் சுதா கொங்கரா கூறியிருந்தார்.

இந்த நிலையில் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சற்றுமுன் வெளியாகி உள்ளது. சூரரைப்போற்று படத்தில் சூர்யா நடித்த கேரக்டரில் நடிக்க அக்சயகுமார் நடிக்க இருப்பதாகவும் நாயகியாக ராதிகா மதன் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது .

மேலும் இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் தயாரிக்கும் முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கும் நிலையில் இந்த படத்தின் மற்ற நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version