சினிமா செய்திகள்

சூரரைப்போற்று படம் அக்டோபர் 30 அமேசான் பிரைமில் வெளியாகுமா?

Published

on

சூர்யா நடிப்பில், கொரோனாவுக்கு முன்பே வெளியாக தயாராகி வந்த சூரரைப்போற்று திரைப்படம், கொரோனாவால் தள்ளிப்போனது, இந்நிலையில் அமேசான் பிரைமில் அக்டோபர் 30-ம் தேதி வெளியாக வாய்ப்பில்லை என்று தகவல்கள் கூறுகின்றன.

சில மாதங்களுக்கு முன்பு, ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் குஞ்சன் சக்சேனா என்ற திரைப்படம் வெளியானது. அதில் ஏர் போர்ஸில் முதன் முதலாக சேர்ந்த பெண் அதிகாரிக்கு நேர்ந்த பாலியல் ரீதியான பாகுபாடு போன்ற காட்சிகள் இடம்பெற்றன.

அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஏர் போஸ்ர்ஸ், இப்படி எங்கள் அனுமதியில்லாமல் இந்த காட்சிகள் எல்லாம் படமாக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பியுள்ளது.

சூரரைப்போற்று திரைப்படமும் ஏர் போர்சில் இருந்து வெளியேறி, குறைந்த விலை விமான நிறுவனம் தொடங்குவது போன்ற முக்கிய கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். அதனால் எங்கு இந்த படத்தை வெளியிடும் போது இந்தியன் ஏர் போர்ஸ் நோட்டீஸ் அனுப்பிவிடுமோ என்று பயந்து, அமேசான் பிரைம் நிறுவனம் படக்குழுவினரிடம் இந்தியன் ஏர் போர்சிடம் இருந்து படத்தை வெளியிட அனுமதி சான்றிதழ் ஒன்றை கேட்டுள்ளது.

அதற்கு படக்குழுவினர் முயற்சி செய்தாலும், அதற்கு ஏர்போர்ஸ் அவ்வளவு எளிதாக அனுமதி வழங்காது என்று கூறப்படுகிறது. எனவேதான் சூரரைப்போற்று படம் குறித்த விளம்பரங்கள் எதையும் அமேசான் பிரைம் வெளியிடாமல் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அக்டோபர் 30-ம் தேதிக்குள் அனுமதியுடன் படக்குழுவினர் வந்தால் அமேசான் பிரைம் சூரரைப்போற்று திரைப்படம் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளது.

இதுவரை அமேசானில் நேரடியாக வெளியான அனைத்து படங்களும் தோல்வியையே தழுவியுள்ளன. எனவே இந்த படமாவது அமேசான் பிரைமில் வெளியாகி வெற்றி பெறுமா என்று பார்த்தால், அதற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version